Bright Zoom Today News
ஆகஸ்ட் 12 காலை நேரச் செய்திகள்
தமிழக முதல்வர் உத்தரவு.. ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
உலகின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியல்:
பார்ச்சூன் (கழசவரநெ) இதழ் வெளியிட்ட உலகளவிலான சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 96வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா-நேபாளம்... ஆகஸ்ட் 17ஆம் தேதி:
இந்தியா-நேபாளம் இடையே வளர்ச்சி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாநிலச் செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 12) லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1,200 கோடி ரூபாய் கடன்:
பிரதமர் துவக்கி வைத்த விவசாய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாய குழுக்களுக்கு நபார்டு மற்றும் தேசிய வங்கிகள் 1,200 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளன.
மத்திய அரசு அதிரடி உத்தரவு:
இந்தியா முழுவதும் உள்ள சுங்கத்துறை கிடங்குகளில் தேவையின்றி வைக்கப்பட்டிருக்கும் வெடிக்கும் தன்மையுள்ள பொருட்களை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான குழு ஒப்புதல்:
இஸ்ரேலின் ஹெரான் ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்:
சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
முதல்வர் பழனிசாமி உத்தரவு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு 23,846 மி.கன அடி நீர், பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த திட்டம்:
சென்னை விமான நிலையங்களில் உள்;ர் மொழி தெரிந்த வீரர்களை அதிகளவில் பணியமர்த்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக, சிஐஎஸ்எப் டிஐஜி அனில் பாண்டே தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
இன்று தொடங்குகிறது:
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் போர்ச்சுக்கலில் இன்று தொடங்குகிறது.
இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி:
இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை நவம்பர் மாதத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது.
No comments: