Bright Zoom Today News
ஆகஸ்ட் 12 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரிக்கை:
பிரேசிலின் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தாவிட்டால், 150 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெறப்போவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனா நிராகரிப்பு:
அமெரிக்க அதிபர் பதவி தேர்தல் தொடர்பாக அந்நாடு தெரிவித்திருந்த குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிப்பு:
நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்வதற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உத்தரவு:
ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக அருண் பாலகோபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பி.யாக எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர நுழைவுத் தேர்வை நீட் கலந்தாய்வு முறையில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசாணை:
மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கப்படாததால் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
தங்கம் விலை:
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.1,832 குறைந்து 40,104 ரூபாயாக விற்பனையாகிறது.
6ஆம் கட்ட அகழாய்வு:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு:
அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிப்பு:
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
No comments: