Bright Zoom Today News
ஆகஸ்ட் 13 காலை நேரச் செய்திகள்
சுதந்திர தின கொண்டாட்டம்... தமிழக அரசு அறிவுறுத்தல்... - முக்கியச் செய்திகள்...!!
உலகச் செய்திகள்
புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது:
இலங்கை பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று (புதன்கிழமை) பதவியேற்றது.
கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா:
பணி நிமிர்த்தமாக அமெரிக்கா செல்பவர்களுக்கு வழங்கப்படும் ர்-1டீ விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு அனுமதி:
நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்ய மற்றும் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் திட்டம்:
நேர்மையாக வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சியின் மூலம் தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசு திட்டம்:
நாட்டின் 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க 23 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. பயணிகளுக்கான ரயில் சேவையில் வருமானம் குறைந்துள்ளதாக கூறி 151 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு அறிவுறுத்தல்:
பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்களின்றி சுதந்திர தினம் கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 13) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறை தெரிவிப்பு:
எல்லைப் பாதுகாப்பு படையினருக்காக ருடீபுடு எனப்படும் கையெறி குண்டுகளுடன் கூடிய துப்பாக்கிகளை தயாரித்து புனே ஆயுத தொழிற்சாலை அனுப்ப உள்ளது. பிரதமர் மோடியின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்:
கேரளாவில் சபரிமலையை தவிர்த்து, வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்களை திறப்பதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை:
புதுச்சேரியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
ஆடி கிருத்திகை திருவிழா:
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நேற்று பக்தர்கள் ஆரவாரமின்றி எளிமையாக நடைபெற்றது.
இன்று நீர் திறப்பு:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்படுகிறது.
விளையாட்டு செய்திகள்
டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி:
டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.
2-வது டெஸ்ட் போட்டி:
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
No comments: