உலக வரலாற்றில் இன்று(13-8-20)

உலக வரலாற்றில் இன்று

(13-8-20)

வரலாறு.. 

இன்றைய சிறப்பு தினம்... சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் !!

★ உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.


★ இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முதன்முதலில் 1976ஆம் ஆண்டு சர்வதேச இடது கை அமைப்பு அறிவித்தது.

டி.கே.மூர்த்தி


★  தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர்.


★ சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். இவரது முதலாவது கச்சேரி இவர் 10 வயதாக இருக்கும்போது இடம்பெற்றது.


★ இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார்.


★ மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி" விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.

முக்கிய நிகழ்வுகள் :


★ 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த பிரடெரிக் சேங்கர் இங்கிலாந்தில் பிறந்தார்.


★ 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி செவிலியர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்தார்.


★ 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடல் காஸ்ட்ரோ பிறந்தார்.

★ 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய அரசியல்வாதியும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி மறைந்தார்.

★ 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்த எடுவர்டு பூக்னர் மறைந்தார்.

★ 1826ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இதயத்துடிப்பு மானியைக் (ளவநவாழளஉழிந) கண்டுபிடித்த ரெனே லென்னக் மறைந்தார்.


உலக வரலாற்றில் இன்று(13-8-20) உலக வரலாற்றில் இன்று(13-8-20) Reviewed by Bright Zoom on August 13, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.