Bright Zoom Today News
ஆகஸ்ட் 13 மாலை நேரச் செய்திகள்
விநாயகர் சிலை வைக்க தடை... தமிழக அரசு அறிவிப்பு - முக்கியச் செய்திகள்...!!
உலகச் செய்திகள்
சீனா தெரிவிப்பு:
லடாக் எல்லை பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்று நம்புவதாக சீனா கூறியுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை தெரிவிப்பு:
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இணைந்து திட்டமிட்டு புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
சர்வதேச திடக்கழிவு சங்கத்தின் ஆய்வறிக்கை:
அரசுகளும், நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிடில், அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று சர்வதேச திடக்கழிவு சங்கத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
31வது கூட்டம் ஒத்திவைப்பு:
காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 31வது கூட்டம் நாளை (ஆகஸ்ட் 14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கூட்டம் நடைபெற்றபோது சில மாநிலங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு:
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க மற்றும் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
ஆந்திர கடலோரத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அனுமதி:
மார்ச் 31ஆம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ்-4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் மட்டும் பி.எஸ்-4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்வதற்கான தடை தொடரும் எனவும், மார்ச் 31ஆம் தேதிக்கு பின் வாங்கப்பட்ட பி.எஸ்-4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்ய அனுமதி இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
குஜராத்தில் அடுத்த 8 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிப்பு:
சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 குறைந்து ரூ.5,076-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
பேட்டிங் தேர்வு:
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பயிற்சி முகாமிலிருந்து விலகல்:
சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.
No comments: