Bright Zoom Today News ஆகஸ்ட் 14 காலை நேரச் செய்திகள் கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு - முக்கியச் செய்திகள்..!!
Bright Zoom Today News
ஆகஸ்ட் 14 காலை நேரச் செய்திகள்
கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு:
தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 அமெரிக்க விமானங்களை, வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு:
மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கிராமசபைக் கூட்டம் ரத்து:
சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீண்ட நாட்கள் பிரதமர் பதவி:
நீண்ட நாட்கள் இந்திய பிரதமர் பதவி வகித்த, காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் எனும் பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு உரை:
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு உரையாற்ற இருக்கிறார்.
தமிழக அரசு தெரிவிப்பு:
10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
நாளை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி நாளை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
பாசனத்திற்காக நீர் திறப்பு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் மலர்தூவி தண்ணீரைத் திறந்து வைத்தனர்.
நாளை போக்குவரத்து மாற்றம்:
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
மழையால் ஆட்டம் பாதிப்பு:
இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
No comments: