Bright Zoom Today News
ஆகஸ்ட் 14 மாலை நேரச் செய்திகள்
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அமல்... தமிழக முதல்வர் அறிவிப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
மீண்டும் திறக்க அனுமதி:
இங்கிலாந்தில் வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அமல்:
ஆதார் அல்லது ரேஷன் அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே சமயம் தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்குமாறு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் கொண்டுவரப்பட்ட தளர்வுகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக்கொடி வடிவிலான முகக்கவசங்கள்:
நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக்கொடி வடிவிலான முகக்கவசங்கள் டிரெண்டாகி வருகின்றன.
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்;ர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையில் களமிறங்கியது அமேசான்:
ஆன்லைன் மூலம் மருந்துகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் புதிய சேவையை பெங்க;ருவில் அமேசான் நிறுவனம் தொடங்கி இருக்கிறது.
சி.பி.எஸ்.இ அறிவிப்பு:
10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
தொடர் மழையால் உருவான புதிய அருவிகள்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக சாலையோரங்களில் புதிதாக அருவிகள் உருவாகி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
பறவைகள் நுழைவதை தடுக்க நைலான் வலை:
மதுரை திருமலை நாயக்கர் மஹாலில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி மூலம் ரூ.3 கோடியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஹாலின் திறந்தவெளியான முற்றத்து தாழ்வாரங்களில் புறா உள்ளிட்ட பறவைகள் மஹாலுக்குள் நுழைந்து எச்சமிடுவதை தவிர்க்க, ரூ.11 லட்சம் செலவில் நைலான் வலை பொருத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார் ஜோகோவிச்:
இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதாக உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.
No comments: