Bright Zoom Today News
ஆகஸ்ட் 15 காலை நேரச் செய்திகள்
தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்வு... முதல்வர் அறிவிப்பு - செய்திகள் !
உலகச் செய்திகள்
ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவிப்பு:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவு, நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு உருவானது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
சிறிய ரக விநாயகர் சிலைகள் விற்பனை:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக வீடுகளில் வைத்து வழிபடுவதற்கான சிறிய ரக விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
7-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர்:
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க 7-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசு உத்தரவு:
மத்திய அரசு ஒப்புதல் அளித்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து, ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
182 சிறப்பு ரயில்கள் இயக்கம்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை-கொங்கன் இடையே 182 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தியை பெற்றது இந்தியர்களின் அதிர்ஷ்டம்:
சுதந்திர போராட்டத்தின் வழிகாட்டியாக மகாத்மா காந்தியை பெற்றது இந்தியர்களின் அதிர்ஷ்டம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்:
தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தேசியக்கொடியை முதல்வர் ஏற்றினார்:
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்த்தப்படுவதாக தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிறகு முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
விளையாட்டுச் செய்திகள்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள்... சென்னை வந்தடைந்தனர்:
ஐ.பி.எல். போட்டிக்கு பயிற்சி எடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி உட்பட வீரர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி ஆட்டம்:
லிஸ்பனில் நடந்த கால்பந்து சாம்பியன்ஸ் லீக் காலிறுதி ஆட்டத்தில் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி பேயர்ன் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட்:
இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அபித் அலி மற்றும் ரிஸ்வான் அரை சதமடிக்க இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
No comments: