Bright Zoom Today News
ஆகஸ்ட் 15 மாலை நேரச் செய்திகள்
கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் - செய்திகள் !
உலகச் செய்திகள்
சீனாவின் ஹோட்டல்களில் கட்டுப்பாடுகள்:
சீனாவின் ஹோட்டல்களில் இனி உணவு அருந்தும்போது உணவு வீணாக்குவதை தவிர்க்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஹோட்டலுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கைக்கும் குறைவான உணவுதான் ஆர்டர் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மரியாதை:
இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாய் நூற்றாண்டு நிறைவையொட்டி, சந்திரயான்-2 நிலாவின் சுற்றுப்பாதையில் எடுத்த படங்களில் காணப்படும் பள்ளத்தாக்கிற்கு சாராபாய் பள்ளம் என பெயரிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மரியாதை செலுத்தியுள்ளது.
அதிக இந்தியர்களின் ஆதரவு... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு:
ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை காட்டிலும், தனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ஆலோசனை கூட்டம் நிறைவு:
தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் 2 முறை அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதர விவரங்களை
www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத மாதா வெண்கல சிலை... திறந்து வைப்பு:
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள பாரத மாதா வெண்கல சிலையை அந்த மாநில முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சௌஹான் இன்று திறந்து வைத்தார்.
சிறப்பு சலுகைகள் அறிவிப்பு:
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏர் ஏசியா விமான நிறுவனம் ஆயுதப்படை வீரர்களுக்கு ரெட் பாஸ் எனப்படும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
ரத்த தான முகாம் இன்று நடைபெற்றது:
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சமூக இடைவெளியுடன் ரத்த தான முகாம் இன்று நடைபெற்றது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர்நகர கிளை மற்றும் வேலூர் அடுக்கம்பாறைஅரசு மருத்துவமணை சார்பில் 74ஆவது இந்திய சுதந்திர தினமான இன்று (15-8-2020) இரத்த தான முகாம் நடைபெற்றது.
கனமழை பெய்ய வாய்ப்பு:
காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி பணிகள் ஆய்வு:
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகின்ற 20ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யவுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
நிறுவனங்களின் பெயர்கள் வெளியாகியது:
ஐபிஎல்-2020 போட்டியின் விளம்பரதாரர் உரிமத்திற்காக விண்ணப்பம் அனுப்பியுள்ள நிறுவனங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
No comments: