Bright Zoom Today News
ஆகஸ்ட் 17 காலை நேரச் செய்திகள்
நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை.. இன்று முதல் துவங்குகிறது - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவிப்பு:
அலிபாபா நிறுவனத்திற்கு தடை விதிப்பது குறித்து தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய கடலோரக் காவல் படை விரைந்தனர்:
மொரிஷியஸ் கடல் பகுதியில் கொட்டியுள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணிக்காக இந்திய கடலோரக் காவல் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
மாநிலச் செய்திகள்
உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணை பிறப்பிப்பு:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் வரை இலவசமாக கோதுமையும் தர உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் கோதுமை தர உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இன்று முதல் துவங்குகிறது:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்று முதல் துவங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது. மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைவினை கலைஞர்கள் பாதிப்பு:
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பூஜை செய்வதற்கும், சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இ-பாஸ் முறை அமல்:
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இடைவிடாத மழை:
தெலுங்கானாவின் 12 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் ஆறுகள் போல வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல்:
பிரதமர் மோடி பரிந்துரைத்த தேசிய மாணவர் படை விரிவாக்க திட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்விற்கான சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
மாவட்டச் செய்திகள்
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு:
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி:
7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டி:
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டியில் அசத்தலாக விளையாடிய மான்செஸ்டர் அணி தோல்வி அடைய, சுமாராக விளையாடிய லியோன் அணி 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
No comments: