Bright Zoom Today News
ஆகஸ்ட் 17 மாலை நேரச் செய்திகள்
ஜனவரி 15ஆம் தேதி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு - முக்கியச் செய்திகள்...!!
உலகச் செய்திகள்
இஸ்ரேல் அறிவிப்பு:
தங்களின் பாதுகாப்பு நிறுவனங்களின் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை துல்லியமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் திட்டம்:
காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் மோதலை கட்டவிழ்த்து விடுவதற்காகவும், அமைதியை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் அதிக அளவு ஆளில்லா வான்வழி வாகனங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
வீர மரணம்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்களும், சிறப்பு காவல்துறை அதிகாரி ஒருவரும் வீரமரணம் அடைந்தனர்.
தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு:
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 6ஆம் தேதி வரை:
பீகார் மாநிலத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தொடர்ந்து 6 மாதங்களாக வங்கிக்கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகையை எடுக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சோதனை முயற்சியாக 4ஜி இணைய சேவை:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சோதனை முயற்சியாக 2 மாவட்டங்களில் 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த 4ஜி இணைய சேவை வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வரை காஷ்மீரின் கண்டேர்பல் மாவட்டத்திலும், ஜம்மு-வில் உதம்பூர் மாவட்டத்திலும் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் தேர்வு முடிவு:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பொறியியல் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. றறற.யnயெரniஎ.நனர என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தானியங்கி முறையில் இ-பாஸ்:
தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கேற்ப தானியங்கி முறையில் இ-பாஸ் வழங்கும் வகையில் ஆன்லைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் தெரிவிப்பு:
பிரதமர் மோடி அறிவித்த டால்பின் பாதுகாப்புத் திட்டம் இன்னும் 15 நாட்களில் துவக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
தங்கத்தின் விலை குறைவு:
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 40,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
கம்பீர் தெரிவிப்பு:
ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்ற தோனியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
No comments: