Bright Zoom Today News
ஆகஸ்ட் 22 காலை நேரச் செய்திகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம்... ஃபேஸ்புக் நிறுவனம்:
தங்களது கொள்கைகளில் ஒரு சார்புடன் ஃபேஸ்புக் நடந்துக்கொள்வதாக புகார் எழுந்த நிலையில், எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி அரசு அனுமதி:
கடந்த 5 மாதங்களாக பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருக்கும் வாரச்சந்தைகள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை திறக்க டெல்லி அரசு அனுமதியளித்துள்ளது.
கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு:
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது. மும்பையில் சிலை கரைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பக்தர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் ஆணையர் நியமனம்:
முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச டெண்டர் ரத்து:
வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டரை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
சீனர்களுக்கு விசா வழங்க கட்டுப்பாடு:
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் முன்னர் அவர்கள் குறித்த பாதுகாப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மின் உபகரணங்கள் இறக்குமதி குறைப்பு:
தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், மின்துறை சார்ந்த உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
முதல்வர் முடிவு எடுப்பார்:
பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆவணி ஞாயிறு விழாவிற்கு அனுமதி ரத்து:
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு விழாவிற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 27,845 கன அடியில் இருந்து 7,271 கன அடியாக குறைந்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
5 பேருக்கு கேல் ரத்னா விருது உறுதி:
அர்ஜூனா விருதிற்கு தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சாக்ஷி மாலிக், மீராபாய் சானு ஆகியோரின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் நிராகரித்தது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உட்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரெய்னாவிற்கு பிரதமர் மோடி பாராட்டு:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
No comments: