Bright Zoom Today News
ஆகஸ்ட் 21காலை நேரச் செய்திகள்
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்.. அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
இஸ்ரோ தெரிவிப்பு:
சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஓராண்டில் 4,400 முறை நிலவை சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புதிய சுற்று பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது:
இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லை பிரச்சனை தொடர்பாக அரசு அதிகாரிகள் மட்டத்திலான புதிய சுற்று பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
மாநிலச் செய்திகள்
விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு:
விமான நிலைய பாதுகாப்பிற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பயோமெட்ரிக் அவசியம்:
தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் இணைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
துணைவேந்தர் நியமனம்:
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கௌரியும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.சுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதற்கான ஆணையை நேற்று அவர்களிடம் வழங்கினார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்:
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24ஆம் தேதி வரை அவகாசம்:
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசத்தை, வருகின்ற 24ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்திருப்பதாக தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
இன்று திறப்பு:
தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவி நயினார், ராமாநதி மற்றும் கருப்பாநதி அணைகள் இன்று திறக்கப்படுகின்றன.
முதன்மை செயலாளர் உத்தரவு:
வெளிமாநில மக்கள் சென்னைக்கு அதிக அளவில் திரும்பி வருவதால் தொழிற்பேட்டை மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்துதலை கடுமையாக பின்பற்ற நகராட்சி நிர்வாக துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது:
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் அணி, லயன் கிளப் அணியை தோற்கடித்து 11-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று தொடங்குகிறது:
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்படுகிறது.
No comments: