Bright Zoom Today News
ஆகஸ்ட் 22 மாலை நேரச் செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
தேவாலயத்தை மசூதியாக மாற்ற உத்தரவு:
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புகழ்பெற்ற பைசண்டைன் கட்டிடங்களில் ஒன்றான சோரா தேவாலயத்தை மசூதியாக மாற்ற அதிபர் தயிப் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார்.
பிரச்சாரக் குழு தெரிவிப்பு:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடென் மற்றும் அவரது குழு, 4 நாட்கள் தேசிய மாநாட்டின் மூலம் இந்திய மதிப்பில் 524 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக பிரச்சாரக் குழு தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
இந்திய மருத்துவ கவுன்சில் திட்டவட்டமாக தெரிவிப்பு:
நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் அடுத்த 4 நாட்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு:
விநாயகர் சதுர்த்திக்கு பின் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை மொத்தமாக சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி... மத்திய அரசு ஆலோசனை:
தியேட்டர்களை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து செப்டம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அறநிலையத்துறை சுற்றறிக்கை:
தமிழகத்தில் அடுத்த 4 மாதங்களுக்கு கோவில்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் குறித்த விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இ-பாஸ் தேவையில்லை:
மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு இணங்க ஏற்கனவே திட்டமிட்டபடி நீட் மற்றும் துநுநு தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மூன்று நாட்கள் கடை அடைப்பு:
கோயம்பேடு காய்கறி சந்தையை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 27, 28, 29ஆம் தேதிகளில் மூன்று நாட்கள் கடை அடைப்பு நடத்த உள்ளதாக கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் வியாபாரிகள் சங்க தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
முதலமைச்சர் வழிபாடு:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் பிள்ளையாருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.
இன்று நேரில் ஆய்வு:
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மெரீனாவில் பாதுகாப்பு ஏற்பாடு பற்றி காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
விளையாட்டுச் செய்திகள்
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்:
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
No comments: