உலக வரலாற்றில் (23-8-20) இன்று
இன்றைய வரலாறு... தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர்...பிறந்த தினம் !!
🌺ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவு முதல் 23ஆம் தேதி வரை போராடினர்.
🌺 அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
டி.எஸ்.பாலையா
🎥 தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.
🎥 இவர் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
🎥 இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
🎥 கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
🏤 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது.
✍ 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜப்பானிய மொழியையும், தமிழ்மொழியையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்த சுசுமு ஓனோ(Suzumu Ono) டோக்கியோவில் பிறந்தார்.
No comments: