Bright Zoom Today News
ஆகஸ்ட் 24 முக்கியச் செய்திகள்..!!
ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு -
மாலை நேரச் செய்திகள்
உலகச் செய்திகள்
மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு:
அமெரிக்காவில் பள்ளிகள் இயங்காத நிலையில், மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளுக்கு அமெரிக்காவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
ஜிஎஸ்டி வரி ரத்து:
எண்ணெய், பற்பசை மற்றும் சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 29.3 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் வரி, உணவு பொருட்கள் மற்றும் உணவகங்களின் மீதான வரியும் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்:
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியாரிடம் குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவிற்கு எதிராக, கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
கனமழையால் வெள்ளப்பெருக்கு:
குஜராத்தில் கனமழையால் அணைகள் நிரம்பி வழிவதால் ஆற்றங்கரையோர நகரங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு:
நாட்டின் 10 மாநிலங்களில் 5 லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு:
வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
தண்ணீர் திறக்க முதல்வர் ஆணை:
அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், மேலும் சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி விடுமுறை:
ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓணம் பண்டிகையன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்;ர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக வேறொரு நாளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் திறக்க திட்டம்:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நடப்பாண்டிற்கான முதல் தவணை தண்ணீர் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.
நாளை முதல் ஒரு மாதத்திற்கு..:
வருடாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக பழனி கோவிலில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப்கார் சேவை நிறுத்தப்பட உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
No comments: