Bright Zoom Today News
ஆகஸ்ட் 25 காலை நேரச் செய்திகள்
வரும் 29ஆம் தேதி... அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை... - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
எஃப்-35 ஜெட் விமானங்களை விற்க திட்டம்:
இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தால் எஃப்-35 ஜெட் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகரான ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலச் செய்திகள்
இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்:
புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் ஜம்மு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் மிக நீளமான ரோப்கார் சேவை:
அசாம் மாநிலத்திலுள்ள பிரம்மபுத்திரா நதிக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ரோப்கார் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறக்கப்பட்டது.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை:
தமிழகத்தில் இ-பாஸ் முறை தொடர்பாக வரும் 29ஆம் தேதி (சனிக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய நிதியமைச்சகம் தெரிவிப்பு:
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஆண்டிற்கு 40 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு, வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
முப்படை தளபதி எச்சரிக்கை:
இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக முப்படை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓடிடி தளங்களின் மூலம் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல:
ஓடிடி தளங்களின் மூலமாக திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் எச்சரிக்கை:
தனிநபர் செல்லிடப்பேசி எண்ணை, விளம்பரத்திற்காக பயன்படுத்தினால் தொலைத்தொடர்பின் அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
108 ராணுவ தளவாடங்கள் பட்டியல்:
உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கி உற்பத்தி செய்யக்கூடிய 108 ராணுவ தளவாடங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பட்டியலிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,938 கன அடியில் இருந்து 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ டானிக்:
சென்னை மாநகராட்சியில் 5 வயதிற்கு உட்பட்ட 5.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ டானிக் வழங்கும் பணியை ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
இங்கிலாந்திற்கு எதிரான இறுதி டெஸ்ட்:
இங்கிலாந்திற்கு எதிரான இறுதி டெஸ்ட்டில் பாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
No comments: