Bright Zoom Today News ஆகஸ்ட் 24 காலை நேரச் செய்திகள்

 

Bright Zoom Today News

ஆகஸ்ட் 24 காலை நேரச் செய்திகள்


இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து... இன்று முக்கிய ஆலோசனை - செய்திகள்..!! Lk


உலகச் செய்திகள்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம்:


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இஸ்ரேல், சூடான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.


குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்:


12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறியுள்ளது.


முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவிப்பு:


சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என முப்படை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். 


மாநிலச் செய்திகள்

ரயில்வே துறை தெரிவிப்பு:


பொதுமுடக்க காலத்தில் ஒரு கோடியே 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


மத்திய அரசு அனுமதி:


சினிமா படப்பிடிப்பிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.


இன்று முக்கிய ஆலோசனை:


தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.


இன்று முதல் மாணவர் சேர்க்கை:


அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்பிற்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்:


முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான புதிய சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 


மாவட்டச் செய்திகள்

மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது:


கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மே 31ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் 85 நாட்களுக்கு பிறகு முதல் உலையில் தற்போது 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 


விளையாட்டுச் செய்திகள்

6-வது முறையாக சாம்பியன்:


ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பி.எஸ்.ஜி. அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி பேயர்ன் முனிச் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.


ஹால் ஆப் பேம்:


சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை, ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கௌரவிக்கிறது. அந்த பட்டியலில் புதியதாக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


 


Bright Zoom Today News ஆகஸ்ட் 24 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஆகஸ்ட் 24 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on August 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.