Bright Zoom Today News
ஆகஸ்ட் 27 காலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும்... வரும் 31ஆம் தேதி முதல் - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
இலங்கை அரசு அறிவிப்பு:
இந்தியாவிற்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளியுறவு கொள்கை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
கருப்புப் பட்டியலில் சேர்த்தது.. அமெரிக்கா:
சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கிய 24 சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
மாநிலச் செய்திகள்
தேசிய அளவில் 3வது இடம்:
ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில், தேசிய அளவில் தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசுக்கு ஒப்புதல்:
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளைத் தொடங்க மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
வரும் 31ஆம் தேதி முதல்:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரும் 31ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்றும், பழைய கல்வி கட்டணத்தையே பெற வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு:
மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று அறிவித்தார்.
கல்வித் தொலைக்காட்சிக்கு கட்டணம் இல்லை:
தமிழகமெங்கும் மாணவர்களுக்கு டிஜிட்டல் வழிமுறையிலான கற்றலை வழங்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை-ஏர்டெல் நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஏர்டெல் டிடிஹெச்சில் கல்வித் தொலைக்காட்சி கட்டணம் இல்லாமல் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தனபால் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.
மாவட்டச் செய்திகள்
இன்று ஆய்வு மேற்கொள்கிறார்:
கடலூர், நாகை மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
இலவச கட்டாய கல்வியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு, இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறந்த கல்வியாளராக தேர்வு:
சிவகாசி நாரணாபுரம் அரசு பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட்டின் சிறந்த கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
பேட்ஸ்மேன் தரவரிசை:
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஜோகோவிச் தகுதி:
அமெரிக்காவில் நடைபெறும் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட நம்பர் 1 வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
No comments: