Bright Zoom Today News
ஆகஸ்ட் 27 மாலை நேரச் செய்திகள்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
திடீரென ராஜினாமா:
இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்யப்படவுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஐ.நா. தெரிவிப்பு:
ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 10,000க்கும் அதிகமான ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும்:
நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.
முதல்வர் விளக்கம்:
தமிழகத்தில் இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் யார் எங்கு செல்கிறார்கள்? என்பதை கண்டறிய முடியும் என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கல்வி நிலையங்கள் திறக்கப்படாது:
ஒடிசாவில் அக்டோபர் மாதம் துர்க்கா பூஜை முடியும் வரை கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
அடுத்த 48 மணி நேரத்தில்:
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்;ர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆதார் ஆணையம் தெரிவிப்பு:
ஆன்லைனில் ஆதார் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இனி ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க முதலிடம்:
ஃபேஸ்புக்கிற்கு அதிக விளம்பரம் தரும் விளம்பரதாரர்களின் பட்டியலில் பா.ஜ.க முதலிடத்தில் உள்ளது.
நடமாடும் ரேஷன் கடைகள்:
அடுத்த மாதத்தில் தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
நீலகிரி மாவட்டத்திற்கும் உள்;ர் விடுமுறை:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி, சென்னை மற்றும் கோவையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கும் உள்;ர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து:
கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடலூர் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மீண்டும் உயர்வு:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.39,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி விலகல்:
தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஐ.பி.எல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி விலகியுள்ளார்.
No comments: