Bright Zoom Today News
ஆகஸ்ட் 28 காலை நேரச் செய்திகள்
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல்... தமிழக அரசு அனுமதி - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இயல்பு வாழ்க்கை முடங்கியது:
அமெரிக்காவை நேற்று தாக்கிய லாரா சூறாவளிப் புயல் காரணமாக, மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 6 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலச் செய்திகள்
வர்த்தக பயணிகளாக தமிழகம் வருவோருக்கு சலுகை:
தமிழகத்திற்கு வர்த்தக பயணிகளாக வருவோருக்கு இ-பாஸ் அளிக்கப்படுவதோடு, தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை:
வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல்:
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நூலகங்களை மீண்டும் திறப்பதால் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு நூலகத்தில் அனுமதி இல்லை என்றும், காலை 8 மணி முதல் 2 மணி வரை மட்டுமே நூலகங்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் அதிரடி:
மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவராக கௌரவ் கோகோய், கட்சி கொறடாவாக ரவ்னீத் சிங் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நியமித்தார். அதேபோல், மாநிலங்களவையில் காங்கிரஸ் கொறடாவாக ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் உத்தரவு:
மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி இழப்பை ஈடு செய்ய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம் என்றும், மாநில அரசுகள் மது, சிகரெட் போன்ற பொருட்கள் மீதான செஸ் வரியை உயர்த்தலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாளை ஆலோசனை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து குறித்து இக்கூட்டத்திற்கு பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலி இணையதளங்கள்:
ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் இயங்குவதாகவும், வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
இன்று முதல்வர் ஆய்வு:
திருவாரூர் மற்றம் தஞ்சையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார்.
அடுத்த மாதம் 28ஆம் தேதி திறப்பு:
கோயம்பேடு காய்கறி சந்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இன்று இரவு 10.30 மணிக்கு:
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டரில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
No comments: