Bright Zoom Today News ஆகஸ்ட் 28 மாலை நேரச் செய்திகள்

 


Bright Zoom Today News

ஆகஸ்ட் 28 மாலை நேரச் செய்திகள்


இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு... - முக்கியச் செய்திகள்...!!



உலகச் செய்திகள்

ஜப்பான் பிரதமர் ராஜினாமா:


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.


ரஷ்யா தெரிவிப்பு:


இந்தியாவிற்கு 33 போர் விமானங்கள், 5 கேஏ-31 (மய-31) ஹெலிகாப்டர்களை விற்பது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த ஆண்டிற்குள் இறுதியாகிவிடும் என்று நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு:


அமெரிக்காவில் வீசிய லாரா சூறாவளியால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த திட்டம்:


சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவரின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.


முதல் கட்ட பரிசோதனை வெற்றி:


நீரிலும், நிலத்திலும் இயங்கும் வகையில் சீனாவால் உருவாக்கப்பட்ட தாக்குதல் கப்பல், தனது முதல் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.


மாநிலச் செய்திகள்

தமிழக அரசு அனுமதி:


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.


தேசியத் தேர்வு முகமை திட்டம்:


துநுநு தேர்வெழுதும் மாணவர்களுக்காக 10 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளைத் தயார் செய்து வைக்க தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.


விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு:


விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகள் தடை செய்யப்படும் பயணியர் பட்டியலில் வைக்கப்படுவார்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


தேர்வுகளை நடத்த உத்தரவு:


கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், யுஜிசி சுற்றறிக்கையின்படி தேர்வுகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.


பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடல்:


உத்தராகண்ட் மாநிலம் சாமோலியில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.


வரைவு விதிமுறைகள் வெளியீடு:


விமானங்களில் வைஃபை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமானப் போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் விமானங்கள் 3,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும் போதுதான் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.


மாவட்டச் செய்திகள்

காவிரி உபரி நீரை பயன்படுத்த புதிய திட்டம்:


திருவாரூர் மாவட்டத்தில் 3,300 கோடி ரூபாய் செலவில் காவிரி உபரி நீரை பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


ஆபரணத் தங்கத்தின் விலை:


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.39,176-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


விளையாட்டுச் செய்திகள்

பயிற்சியை தொடங்குவதில் தாமதம்:


அபுதாபியில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருப்பதால் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பயிற்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


 

Bright Zoom Today News ஆகஸ்ட் 28 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஆகஸ்ட் 28 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on August 28, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.