Bright Zoom Today News
ஆகஸ்ட் 31 காலை நேரச் செய்திகள்
செப்டம்பர் 1ஆம் தேதி முதல்... தமிழக முதல்வர் உத்தரவு... - முக்கியச் செய்திகள்...!!
உலகச் செய்திகள்
தென் சீனக் கடலில் ரோந்து பணி:
சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, இந்திய போர்க்கப்பல் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிப்பு:
விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் அறிவிப்பு:
கேரள மக்களுக்கு ஓணம் பரிசாக நூறு நாட்களில், நூறு திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவு:
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும், ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலித்தவர்களுக்கு உடனடியாக திருப்பி அளிக்கும் படியும் வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய மேம்பாலம் வரும் 4ஆம் தேதி திறப்பு:
விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் வரும் 4ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த புதிய மேம்பாலம் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் 480 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பு:
கேரளாவின் அறுவடை திருநாளாம் ஓணம் பண்டிகை இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை:
வங்கி அதிகாரிகளுடன் வருகின்ற 3ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
பக்தர்களுக்கு நாளை அனுமதி:
பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசங்கள், சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவு:
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இ-பாஸ் கட்டாயம்:
நீலகிரி மாவட்டத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
புதிய பயிற்சியாளர்:
ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ருமேனியாவை சேர்ந்த சிபா லாஸ்லோ நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்:
'கிராண்ட்ஸ்லாம்" என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 13ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
No comments: