Bright Zoom Today News
செப்டம்பர் 02 மாலை நேரச் செய்திகள்
வரும் 7ஆம் தேதி முதல்... தமிழக முதல்வர் உத்தரவு... - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவிப்பு:
சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இருமடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானவியலாளர்கள் சாதனை:
பூமியிலிருந்து 93 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளி மண்டலத்தை கண்டுபிடித்து இந்திய வானவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு தீர்மானம்:
நூறு நாள் வேலைத்திட்டம் எனப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வரும் 7ஆம் தேதி முதல்:
வரும் 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக்கூடாது என்றும், தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
14 துணை காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்:
தமிழகத்தில் 14 துணை காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
40 சதவீதத்திற்கு மேல் கட்டணம் வசூல் செய்த தனியார் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை நாளைக்குள் (செப்டம்பர் 3) அனுப்பும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஆபரணத் தங்கத்தின் விலை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ.39,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.53 குறைந்து ரூ.4,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வர் ஆய்வு:
திருவள்ள ர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு செப்டம்பர் 7 மற்றும் 9ஆம் தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை விலகல்:
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து விலகியுள்ளார்.
பதவிக்காலம் நீட்டிப்பு:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட்டின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments: