Bright Zoom Today News
செப்டம்பர் 09 மாலை நேரச் செய்திகள்
மாணவர்களுக்கு நற்செய்தி... 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இல்லை - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
நாளை 5 ரபேல் போர் விமானங்கள் இணைப்பு:
பிரான்ஸ் நாட்டால் முதற்கட்டமாக ஒப்படைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் நாளை முறைப்படி இணைக்கப்படுகின்றன.
படைவீரர்களை குவிக்கும் சீனா:
மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் நோக்கில் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் சீன ராணுவம் படைவீரர்களை குவித்து வருகிறது.
மாநிலச் செய்திகள்
30 சதவீத மானிய விலையில் இடம்:
தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க 30 சதவீத மானிய விலையில் இடம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்:
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகின்ற 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திடீரென ஆய்வு:
புதுச்சேரியில் அரசு அதிகாரிகளின் வருகைப்பதிவு குறித்து புகார்கள் வந்த நிலையில் தலைமை செயலகத்தில் திடீரென ஆய்வு நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி சரியான நேரத்தில் பணிக்கு வராத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரம்மோற்சவம்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 19ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கவுள்ளது.
மாவட்டச் செய்திகள்
நாளை முதல் இரவு 9 மணி வரை:
சென்னையில் நாளை முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திமுக தலைவர் அறிவிப்பு:
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம்:
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு மாவட்டத்தில் பொதுப்பணி, தோட்டக்கலை, பால்வளம் ஆகிய துறைகளின் சார்பில் ரூ.17.20 கோடி மதிப்பிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டுச் செய்திகள்
சி.பி.எல் போட்டி:
இந்த வருட சி.பி.எல் போட்டியின் இறுதிச்சுற்றில் நாளை செயிண்ட் லூசியா-டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
டி20 தரவரிசை:
பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
No comments: