Bright Zoom Today News
செப்டம்பர் 10 காலை நேரச் செய்திகள்
இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
2-வது முறையாக தேர்ந்தெடுப்பு:
இங்கிலாந்தில் துணை மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை:
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய, ரஷ்ய மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
செப்டம்பர் 15ஆம் தேதி வெளியீடு:
சிறந்த தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கான 'விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியர் விருது" பட்டியல் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இன்று காணொளி காட்சியின் மூலம்...:
மீனவர்கள் மற்றும் பண்ணைக் குட்டை மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்காக பிரதமரின் மீனவர் அபிவிருத்தித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சியின் மூலம் தொடங்கி வைக்கிறார்.
100 பேர் மட்டுமே அனுமதி:
தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்பக்கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தெரிவிப்பு:
பெரிய ரெஸ்டாரண்ட்கள், ஹே
ட்டல்களை போல் சாலையோரங்களில் நடத்தப்படும் உணவு கடைகளுக்கும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்வதற்கான வசதியை அளிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை துணைத்தலைவர் பதவி:
மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி ஹரிவன்ஷ் நாராயண் சிங் நேற்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
சட்டப்படி கடும் நடவடிக்கை:
விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது:
சென்னை மற்றும் திருச்சியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. சென்னை-டெல்லி, சென்னை-சாப்ரா, திருச்சி-ஹவுரா ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
ஒரு மணி நேரம் சேவை நீட்டிப்பு:
சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் நிலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கடைசி 20 ஓவர் போட்டி:
கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
No comments: