Bright Zoom Today News
செப்டம்பர் 29 காலை நேரச் செய்திகள்
இன்று மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்.. முதல்வர் ஆலோசனை - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்:
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இன்று நடைபெறவுள்ள முதல் நேரடி விவாதத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் பங்கேற்கின்றனர்.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு அறிவிப்பு:
வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில், உள்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனும் அம்சம் இனி இடம்பெறாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று ஆலோசனை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாநில அரசு உத்தரவு:
கர்நாடகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை திடீரென பணியிட மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:
இன்று துவங்குவதாக இருந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மராட்டிய அரசு அறிவிப்பு:
2020-21ஆம் ஆண்டிற்கான லதா மங்கேஷ்கர் விருது, லதா மங்கேஷ்கரின் சகோதரியான உஷா மங்கேஷ்கருக்கு வழங்கப்படுவதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
6 புதிய திட்டங்கள்:
கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் இன்று உத்தரகண்டில் 6 புதிய திட்டங்களை காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
வருகின்ற 1ஆம் தேதி கலந்தாய்வு:
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். மேலும் கலந்தாய்வு வருகின்ற 1ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கும் என அறிவித்தார்.
எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை:
வாட்ஸ்-அப் செயலி மூலம் புதிய மோசடி நடைபெறுவதாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் ஒப்புதல்:
சென்னையில் என்.ஐ.ஏ கிளை அலுவலகம் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
மூத்த அதிகாரி நியமனம்:
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணைய (டிராய்) தலைவராக மூத்த அதிகாரி பி.டி.வாகேலா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
சென்னை மாநகராட்சி அறிவிப்பு:
சொத்து வரியை உரிய தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத பணம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் மற்றும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட்:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்க;ரு அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
No comments: