Bright Zoom Today News
செப்டம்பர் 28 காலை நேரச் செய்திகள்
அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள்... இன்று முதல் டோக்கன் விநியோகம் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை:
அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு:
பெயரில்லாமல் வரும் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 14ஆம் தேதி:
தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கக்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்களின் விவரங்களை, வரும் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று முதல் டோக்கன் விநியோகம்:
அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
திட்டங்கள் அறிவிப்பு:
பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில், குறைந்த கட்டணத்தில் அதிக பலன்கள் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நேற்று ஒப்புதல்:
எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார்.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 5-வது முறையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
ஜனவரிக்குள் முடிக்க உத்தரவு:
பொதுப்பணித்துறையில் ரூ.4,000 கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை ஜனவரிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு:
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது.
மாவட்டச் செய்திகள்
விரைவில் அறிமுகப்படுத்த திட்டம்:
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பயன்படும் வகையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத சூரியமின்சக்தி (சோலார்) அல்லது மின்னணு (எலக்ட்ரிக்) ஆட்டோ சேவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை:
கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோவில் இடையே நாளை ரயில்கள் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் தண்டவாளம் அருகே பொதுமக்கள் நடக்கவோ அல்லது பாதையை கடக்கவோ வேண்டாம் என சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுக செயற்குழுக் கூட்டம்:
அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி:
4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி:
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் 11-வது அணியாக
No comments: