Bright Zoom Today News
செப்டம்பர் 29 மாலை நேரச் செய்திகள்
பள்ளிகள் திறப்பு... மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.. முதல்வர் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
37 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர்..:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 37 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், மத ரீதியான பதற்றம் அதிகம் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முதலமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவிப்பு:
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்து தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படுமென செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் முடிவு:
தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 9ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு:
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக படிப்பிற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 9ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
தங்கம் விலை உயர்வு:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 உயர்ந்து ரூ.38,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு தெரிவிப்பு:
சென்னை மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை:
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியான அக்டோபர் 1ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மீண்டும் ஒத்திவைப்பு:
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேச அணி இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments: