Bright Zoom Today News
அக்டோபர் 01 காலை நேரச் செய்திகள்
கிராம சபை கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
இஸ்ரோ திட்டம்:
2025ஆம் ஆண்டில் வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழகத்தில் நாளை...:
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் அமல்:
நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம்:
தமிழகத்தில் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசு அறிவிப்பு:
பொதுமுடக்கம் நேற்றுடன் முடிந்த நிலையில், 5ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், வரும் 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கல்வி நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 31ஆம் தேதி வரை:
மராட்டியத்தில் பொதுமுடக்க உத்தரவை வருகின்ற 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ள அம்மாநில அரசு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்:
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது:
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. ஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல் செய்யவும், டெபாசிட் பணத்தை செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி... நேர்காணல் தேர்வு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள்-2க்கான நேர்காணல் தேர்வு வரும் 19ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
கர்நாடகத்தில் மாணவர்கள் வருகின்ற 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு வர தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் கொண்டு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
சிறப்பு ரயில்கள்:
சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா மற்றும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட்:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
No comments: