Bright Zoom Today News
அக்டோபர் 02 காலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும் இன்று... கிராம சபை கூட்டங்கள் ரத்து - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ஆறாவது நாளாக தொடர்ந்து நீடிப்பு:
அர்மீனியா-அஜர்பைஜான் இடையேயான மோதல் ஆறாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு உத்தரவு:
ரேஷன் கடையில் பாமாயிலை தேவைக்கு ஏற்ப வழங்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர்களின் விவரங்களை அனுப்ப தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கிராம சபை கூட்டங்கள் ரத்து:
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள்:
இன்று மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு அறிவிப்பு:
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு:
தமிழகத்தில் ஹோட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக கேஸ் சிலிண்டர் ரூ.26 உயர்த்தப்பட்டு ரூ.1,276 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு:
பண்டிகைக்காலத்தில் கூடுதலாக 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மாநாடு:
சமூக வலுவூட்டலுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 5ஆம் தேதி காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்... கருடசேவை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கருடசேவை சிறப்பாக நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவிப்பு:
மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு:
கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், திட்டமிட்டபடி தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட்:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
No comments: