Bright Zoom Today News
அக்டோபர் 03 காலை நேரச் செய்திகள்
தடையை மீறி மாநிலம் முழுவதும்... கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ஒளிரூட்டப்பட்ட காந்தியடிகளின் உருவம்:
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிபாவில், அவரது உருவம் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.
இந்தியா சார்பில் ஆம்புலன்ஸ்கள் நன்கொடை:
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்டை நாடான நேபாளத்திற்கு, இந்தியா சார்பில் ஆம்புலன்ஸ்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மாநிலச் செய்திகள்
கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு:
கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் ஒன்றாக கூட அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளன. எனினும், பொது போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி மாநிலம் முழுவதும்:
தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது.
மத்திய அரசு தெரிவிப்பு:
கடந்த மார்ச் மாதத்திற்கு பின் விவசாயிகள், ஏழைகள் மற்றும் பெண்கள் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 35,000 கோடி ரூபாய் நிதியுதவியாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புரட்டாசி 3வது சனிக்கிழமை:
பெருமாளுக்கு உகந்த நாளான புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள பெருமாள் கோவில்களில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாவட்டச் செய்திகள்
கைவினை பொருட்கள் கண்காட்சி:
சென்னையில் நவராத்திரியை முன்னிட்டு கைவினை பொருட்கள் கண்காட்சி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா மண்டபத்தில் வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
42 நிறுவனங்களின் மீது நடவடிக்கை:
திருப்பூரில் காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 42 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், காங்கேயம், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள 42 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு:
நாமக்கல் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நேற்று ரூ.5.05-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை 20 காசுகள் அதிகரித்து ரூ.5.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று முதல் செயல்படும்:
திருவாரூர் மாவட்டத்தில், இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐதராபாத் அணி வெற்றி:
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
No comments: