Bright Zoom Today News
அக்டோபர் 05 காலை நேரச் செய்திகள்
இன்று காலை முதல் தொடங்கியது... புறநகர் மின்சார ரயில்கள் சேவை - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
இன்று முதல் அறிவிப்பு:
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. 5 நாட்கள் அறிவிக்கப்பட உள்ள நோபல் பரிசுகளில் முதல் நாளான இன்று மருத்துவத்துறைக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது.
சுயதொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
👉 சத்து மாவு, அரிசி புட்டு மாவு, கோதுமை புட்டு மாவு, கம்பு ராகி புட்டு மாவு போன்ற மாவு பொருட்களை ஆர்டரின் பெயரில் அல்லது மொத்தமாக வாங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்?
👉 மஞ்சள் தூள், சாம்பார் பொடி, ரசப்பொடி போன்ற அனைத்து மசாலா தயாரிப்புகளையும் ஆர்டரின் பெயரில் அல்லது மொத்தமாக வாங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்?
இப்பொழுதே தொடர்பு கொள்ளுங்கள்...
📞 7558166268
📞 6381397639
ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி உள்ளது.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்
சத்தான பொருட்களை பயன்படுத்துங்கள்..!!
மாநிலச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு மாநாடு:
சமூக வலுவூட்டலுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டை, காணொளி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து முடிவு செய்வதற்காக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல காற்று சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரூ.250 அபராத கட்டணம்:
தற்போது ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய தாமதமானால் ரூ.250 அபராத கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும் என தமிழக வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு உத்தரவு:
உள்ளாட்சியிடம் இருந்த 801 சாலைகளை மேம்படுத்த ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
இன்று காலை முதல் தொடங்கியது:
அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக இன்று முதல் 42க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் சேவை இன்று காலை முதல் தொடங்கியது.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா வெற்றியை பெற்றது.
No comments: