Bright Zoom Today News
அக்டோபர் 06 காலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து... இன்று அவசர ஆலோசனை - முக்கியச் செய்திகள்..!!
அக்டோபர் 06
உலகச் செய்திகள்
ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது:
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும், குவாட் நாடுகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மாநிலச் செய்திகள்
வரும் 15ஆம் தேதி முதல்:
வரும் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மீண்டும் ஆலோசனை:
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிலுவைத் தொகை தொடர்பாக முடிவு எட்டப்படாத நிலையில் அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடைபெறும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று அவசர ஆலோசனை:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்வது குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவிப்பு:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது, அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்தார்.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அதிகாரி பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான முறையே முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில் தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 16 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள நிலையில், மேலும் 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுச் செய்திகள்
டெல்லி அணி 4வது வெற்றி:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பெங்க;ருவை வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்றது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.
No comments: