Bright Zoom Today News
அக்டோபர் 07 காலை நேரச் செய்திகள்
2ஆம் கட்ட மாணவர் சேர்க்கை... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ஓமன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு:
ஓமனில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு விமான சேவையை தொடங்குவதாக ஓமன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
பயணிகள் பட்டியலை ஒட்டும் நடைமுறை:
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பயணிகள் பட்டியலை ஒட்டும் நடைமுறையை ரயில்வே நிர்வாகம் மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு நடவடிக்கை:
அனைத்து விதமான முகக்கவசம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில் சுவுநு எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2ஆம் கட்ட மாணவர் சேர்க்கை வருகின்ற 12ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் பங்கேற்க தடை:
தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மகாராணி பிரமோதா தேவி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 122 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
16 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்:
அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே 10 லட்சத்து 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்யும் வகையில், 16 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு:
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
தினசரி 1,000 பேருக்கு மட்டும் அனுமதி:
மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் சுவாமி தரிசனத்திற்கு தினசரி 1,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
சென்னை மாநகராட்சி அறிமுகம்:
சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.999 செலுத்தி சைக்கிளை வீட்டிற்கு எடுத்து செல்லும் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி:
வரும் 15ஆம் தேதி முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
மும்பை அணி அபார வெற்றி:
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இளம் வீரர் பிரித்வி ராஜ் யார்ரா சேர்ப்பு:
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ராஜ் யார்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
No comments: