Bright Zoom Today News
அக்டோபர் 08 காலை நேரச் செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு 6 நாள் சாதாரண விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை - செய்திகள்..!
உலகச் செய்திகள்
நடப்பாண்டின் செப்டம்பர்...:
நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் உலகில் மிகவும் சூடான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை:
இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அரசாணை வெளியீடு:
சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுத்துக்கொள்ளவும் தெரிவித்துள்ளது.
தனியார் தேஜஸ் ரயில் சேவை:
பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட தனியார் தேஜஸ் ரயில் சேவை வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது என ஐஆர்சிடிசி நேற்று அறிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகம் தெரிவிப்பு:
பண்டிகைக்காலங்களை முன்னிட்டு மேலும் 78 சிறப்பு ரயில்கள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காணொளி காட்சி மூலம் ஆலோசனை:
13-வது பெங்க;ரு சர்வதேச விமான கண்காட்சி குறித்து வெளிநாட்டு தூதர்களுடன் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார்.
மந்திரிகளுடன் இன்று ஆலோசனை:
கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்க;ருவில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
இன்று இந்திய விமானப்படை தினம்:
இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமானப்படை போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய துணை ஆளுநர்:
ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ராஜேஷ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கோடிக்கணக்கில் நஷ்டம்:
ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தானதால் சேலத்தில் ஜவுளி, வெள்ளி, இயந்திர உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி:
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் விளையாட ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.
No comments: