Bright Zoom Today News
அக்டோபர் 17 காலை நேரச் செய்திகள்...
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை - காலைச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
வரலாறு காணாத சேதம்:
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலச் செய்திகள்
நவராத்திரி பிரமோற்சவம்:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரமோற்சவத்தில் இன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்னவாகனத்திலும்; சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். வருகின்ற 24ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.
இன்று விடுமுறை:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்ட பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை தினங்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய நாட்களில் மேற்கொண்டனர். எனவே ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்ட அந்த நாட்களுக்கு செப்டம்பர் 19, அக்டோபர் 17 (இன்று), நவம்பர் 21 ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணை:
நாடு முழுவதும் விரைவில் வெளியாக உள்ள பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணையில் 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நீக்கப்பட உள்ளன.
எதிர்காலத்தில் ஏசி பெட்டிகள் மட்டுமே இருக்கும்:
மணிக்கு 130 கிலோ மீட்டர் அல்லது அதற்கு கூடுதலான வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களில், எதிர்காலத்தில் ஏசி பெட்டிகள் மட்டுமே இருக்கும் என, ரயில்வே வாரிய சிஇஓ விகே யாதவ் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவிப்பு:
பொதுமுடக்கத்தில் வேலை இழந்த தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்திருந்தால், வேலை இழந்த காலத்திற்கு சம்பளத்தின் ஒரு பகுதியை 3 மாதங்களுக்கு இஎஸ்ஐக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கியுள்ளது:
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு முக்கிய அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்.
நீட் தேர்வு முடிவுகள்:
நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை:
வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிப்பு:
5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி:
ஐ.பி.எல் 2020 கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
No comments: