Bright Zoom Today News
அக்டோபர் 19 மாலை நேரச் செய்திகள்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம்... நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
அதி நவீன அடுக்குமாடி குடியிருப்பை விற்க திட்டம்:
பிரிட்டிஷ் கோடீஸ்வரரான ஜேம்ஸ் டைசன், சிங்கப்பூரின் மிக விலையுயர்ந்த தனது அதி நவீன அடுக்குமாடி குடியிருப்பை விற்க திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பக்ரைனுடன் பேச்சுவார்த்தை:
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் தூதுக்குழு (ஊயடிiநெவ ஆளைளழைn) புறப்பட்டது.
மாநிலச் செய்திகள்
சர்வதேச விதிமுறைகளின்படி நடைபெறும்:
2021ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் சர்வதேச விதிமுறைகளின்படி நடைபெறும் என்று மத்திய சிறுபான்மையோர் மந்திரி முக்தார் நக்வி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வேண்டுகோள்:
மாறி வரும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு:
பொறியியல் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் துவங்கும் எனவும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் உத்தரவு:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாவட்டச் செய்திகள்
திமுக தலைவர் வலியுறுத்தல்:
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை:
புகழ் பெற்ற தொல்லியல் சின்னங்களான ரஞ்சன்குடி கோட்டை, வாலீஸ்வரர் கோவில், சமாஸ்கான் பள்ளிவாசல், காரை முதுமக்கள் தாழிகள் உள்ளடங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை திருச்சி இந்திய தொல்லியல் நிர்வாக வட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
இன்று நடைபெறும் போட்டி:
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
No comments: