TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!!
பொதுத்தமிழ்..!
கலைகள் - ஓவியம் ..!
TNPSC Competitive Exams - 2022, General Tamil, Arts-Painting,
Bright Zoom,
ஓவியம் - (பகுதி - 1)!!
★ ஆயக்கலைகள் மொத்தம் எத்தனை?
- 64
★ எந்த கலைக்கு காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் உண்டு?
- ஓவியகலை
★ பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத் தொடங்கிய இடம் எது?
- குகை
★ குகைகளில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாக இருக்கும்?
- கோட்டோவியங்கள்
★ குகைகளில் காணப்படும் ஓவியங்கள் யாவை?
- வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்
★ குகைகளில் காணப்படும் ஓவியங்களுக்கு எதைக் கொண்டு வண்ணம் தீட்டினர்?
- மண் மற்றும் கல் துகள்கள்
★ சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் யாவை?
- அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள், வீடுகள்
★ சுவர் ஓவியங்களை எதைக் கொண்டு உருவாக்கினார்கள்?
- ஆற்று மணல் மற்றும் சுண்ணாம்பு
★ சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாகும்?
- சுவர் ஓவியம்
★ யாருடைய வாழ்க்கை நினைவாக தஞ்சை பெரிய கோவிலில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன?
- சுந்தரர்
★ புனையா ஓவியங்கள் பற்றி குறிப்பிடும் இலக்கியங்கள் எவை?
■ நெடுநல்வாடை
■ மணிமேகலை
★ ஓவியம் வரையும் துணியை எவ்வாறு அழைத்தனர்?
- எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
★ ‘புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்’ - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
- நெடுநல்வாடை
★ துணி ஓவியங்களின் மற்றொரு பெயர் என்ன?
- கலம்காரி ஓவியங்கள்
★ சீவக சிந்தாமணியில் சீவகன் எந்தக் காட்சியை துணியால் வரைந்தான்?
- குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சி
★ எந்த மாநிலங்களில் கலம்காரி ஓவியங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன?
- தமிழகம், ஆந்திரா
★ ‘புனையா ஓவியம் புறம் போந்தன்ன’ என்று புனையா ஓவியத்தைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?
- மணிமேகலை
★ தற்போது எந்த வகை ஓவியங்களை காண்பது அரிதாகிவிட்டது?
- ஓலைச்சுவடி ஓவியங்கள்
★ ஓலைச்சுவடி ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
- இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகள் ஆகும்
★ ஓலைச்சுவடி ஓவியங்கள் எங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன?
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

No comments: