TNPSC பொதுத்தமிழ்
தமிழ் இலக்கியம் - பரிபாடல்!!
Tamil Literature - Paribadal!!
Bright Zoom,
தமிழ் இலக்கியம் - பரிபாடல்!!
★ பரிபாடல் -------------------- நூல்களுள் ஒன்று.
- எட்டுத்தொகை
★ இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்?
- ஓங்கு பரிபாடல்
★ உரையாசிரியர்கள் பரிபாடலில் எத்தனைப் பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்?
- 70
★ பரிபாடலில் இன்று நமக்கு கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை?
- 24 பாடல்கள்
★ 'விசும்பில் ஊழி ஊழி ஊழ் செல்லக்கரு வளர் வானத்து இசையில் தோன்றி" எனும் பாடலை எழுதியவர் யார்?
- கீரந்தையார்
சொல்லும் பொருளும் :
◆ விசும்பு - வானம்
◆ ஊழி - யுகம்
◆ ஊழ - முறை
◆ தண்பெயல் - குளிர்ந்த மழை
◆ ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
◆ பீடு - சிறப்பு
◆ ஈண்டி - செறிந்து திரண்டு
இலக்கணக் குறிப்பு :
◆ ஊழ் ஊழ் - அடுக்குத் தொடர்
◆ வளர் வானம் - வினைத்தொகை
◆ செந்தீ - பண்புத்தொகை
◆ வாரா(ஒன்றன்) - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

No comments: