TNPSC - பொதுத்தமிழ் இலக்கியம் கலித்தொகை!! TNPSC - potuttamil ilakkiyam.! Kalittokai!!

TNPSC - பொதுத்தமிழ்  லக்கியம் கலித்தொகை!!

TNPSC - potuttamil   ilakkiyam.!  Kalittokai!!

★  கலித்தொகை ------------------------------- நூல்களுள் ஒன்று.

 - எட்டுத்தொகை

★  கலித்தொகையில் கடவுள் வாழ்த்துடன் எத்தனைப் பாடல்கள் உள்ளன?

 - 150

★  கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?

 - நல்லந்துவனார்

★  கலித்தொகையின் கடவுள் வாழ்த்து எந்தக் கடவுளைப் பற்றி பாடப்பட்டுள்ளது?

 - சிவன்

★ கலித்தொகையின் திணை வரிசை?

 - பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் 

★  பாலை திணையின் 35 பாடல்களைப் பாடியவர் யார்? 

- பெருங்கடுங்கோ

★  குறிஞ்சி திணையின் 29 பாடல்களைப் பாடியவர்?

 - கபிலர்

.  மருதத்திணையின் 35 பாடல்களைப் பாடியவர்? 

- மருதனிளநாகனார்

★  முல்லை திணையின் 17 பாடல்களைப் பாடியவர் யார்? - சோழன் நல்லுருத்திரன்

★  நெய்தல் திணையின் 33 படல்களைப் பாடியவர்?

 - நல்லந்துவனார்

★  கலித்தொகையில் குறைந்த பாடல்களைக் கொண்ட திணை எது?

 - முல்லை

★ கலித்தொகைக்கு உரை எழுதியவர் யார்? 

- நச்சினார்க்கினியர் 

★  கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர்?

 - சி.வை.தாமோதரம் பிள்ளை

.  கலித்தொகையைத் தொகுத்தவர்? 

- நல்லந்துவனார்

★ இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?

 - கலித்தொகை

★  கலித்தொகை நூல் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? 

- கற்றறிந்தோர் ஏத்தும் கலி

★  எந்த மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்கள் பற்றி கலித்தொகையில் குறிப்பிடவில்லை?

 - பாண்டியர்

★  கலித்தொகை கூறும் தமிழர் விளையாட்டு எது?

 - ஏறு தழுவுதல் 

★  பெருந்திணைப்பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?

 - கலித்தொகை

★  --------------------- பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.

 - காமக்கிழத்தி

★  கலித்தொகை நூல் மிகுதியாக கூறும் கதைகள்? - பாரதக் கதைகள்

★  நாடகம் போன்ற காட்சி அமைப்புகளைக் கொண்ட சங்க நூல்? 

- கலித்தொகை.

★ -------------, ----------------- என்ற விளிச்சொற்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை.

 - ஏடா, ஏடீ 



TNPSC - பொதுத்தமிழ் இலக்கியம் கலித்தொகை!! TNPSC - potuttamil ilakkiyam.! Kalittokai!! TNPSC - பொதுத்தமிழ்   இலக்கியம் கலித்தொகை!!  TNPSC - potuttamil   ilakkiyam.!  Kalittokai!! Reviewed by Bright Zoom on August 03, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.