இந்திய நவீன கல்வியின் ஆணிவேர் அபுல்கலாம் ஆசாத் | abul-Kalam-azad-is-the-root-of-indian-modern-education

இந்திய நவீன கல்வியின் ஆணிவேர் அபுல்கலாம் ஆசாத் | abul-Kalam-azad-is-the-root-of-indian-modern-education

தேசிய கல்வி தினம்: 

national-education-day

Bright Zoom


★  இந்தியாவின் கல்வி முறையைப் புதுமையை நோக்கி முதன்முதலில் நகர்த்திய பெருமைக்குரியவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத். 

★ சாதி, மத, இனப் பாகுபாடின்றி பதினான்கு வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய பெருமகன்.

★ 1888 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று மெக்காவில் பிறந்த அபுல்கலாம் ஆசாத்தின் இயற்பெயர் மிக நீளமானது, சையத் குலாம் முஹைதீன் அஹமது பின் கைய்ருதின் அல் ஹூசைனி. 

★ ஆசாத்தின் தந்தை, ஆப்கான் பாரம்பரியத்தில் வந்த வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர். டெல்லியில் உள்ள தன் தாய்வழி தாத்தா வீட்டில் வசித்த அவரின் தந்தையார், 1857 ஆம் ஆண்டு மெக்காவுக்குச் சென்றார். பின்னர் 1890 ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தார் ஆசாத்.

★ அபுல்கலாமின் தந்தை பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார். 

★ தாய் மதீனாவைச் சேர்ந்தவர். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே கல்வி பயின்ற ஆசாத்துக்கு அரபு தாய்மொழி.

★  மேலும், வங்காளம், ஹிந்துஸ்தானி, பெர்சியன் மற்றும் ஆங்கில மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தன.

★   வீட்டிலேயே அவர் திருக்குர்ஆன், கணிதம், தத்துவம், உலக வரலாறு மற்றும் அறிவியல் பாடங்களையும் கற்றுத் தெளிந்தார்.

★ இளமைப் பருவத்தில் எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஆசாத், பதினான்கு வயதிலேயே மக்ஸான் என்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதத் தொடங்கிவிட்டார். 

★ அல் மிஸ்பா, லிஸான் உஸ் சித்திக் போன்ற இதழ்களையும் நடத்தியுள்ளார். 

★ அவருக்கு 13 வயதிலேயே ஜூலைகா பேகம் என்பவருடன் திருமணம் நடந்தது.

★ வகீல் என்ற நாளிதழில் பணியாற்றிய ஆசாத், 1912 ஆம் ஆண்டு அல் ஹிலால் என்ற உருது வார இதழைத் தொடங்கி நடத்தினார். 

★ அதில் பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்டார். வங்கப் பிரிவினையின்போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.

★  ஆங்கிலேய அரசுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று புரட்சிகரமான கட்டுரைகளை வெளியிட்டார். பேச்சிலும் எழுத்திலும் இலக்கிய நயமும், சுதந்திர வெறியும், புரட்சிக் கனலும் தெறித்ததால் ஆங்கிலேய அரசு வங்காளத்தை விட்டு வெளியேற்றியது.

★ பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற ஆசாத், 1925 முதல் 1945 வரை பலமுறை சிறை வாழ்வை அனுபவித்தார். 

★  மகாத்மா காந்தியையும் திலகரையும் சந்தித்தது இவரது வாழ்விலும் சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் திருப்புமுனையாக அமைந்தது. 

★ காந்தி நடத்திய உப்புச் சத்தியாகிரகம் உள்படப் பல போராட்டங்களிலும் ஆசாத் கலந்துகொண்டார்.

★  தமது 35 வயதில் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். 

★ 1942இல் `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆசாத்.

★ சில காங்கிரஸ் தலைவர்களே இந்திய – பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தபோது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.

★ இந்தியா சுதந்திரம் அடைந்த பின் அபுல்கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

★ 1947 முதல் தன் மரணம் வரையில் 1958 வரை அமைச்சராக இருந்தார்.

★  ஆங்கிலேய ஆட்சியில் இந்தியக் கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.

★ ஆசாத் பதவியில் இருந்தபோது, 1951இல் காரக்பூரில் ஐஐடியும், 1953ல் பல்கலைக்கழக மானியக் குழுவும் அமைக்கப்பட்டன. 

★ மேலும், பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத் துறை அமையவும் முயற்சி செய்தார் ஆசாத்.


★ சாகித்ய அகாடெமி, லலித் கலா அகாடெமி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை உருவாக்குவதில் அபுல்கலாம் ஆசாத் பெரும்பங்காற்றினார்.

★ இலவச கட்டாய கல்விக்குக் குரல்கொடுத்த ஆசாத், ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

★ வாழ்நாளின் இறுதி வரை இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட தலைவரான அபுல்கலாம் ஆசாத், தன் எழுபதாவது வயதில் 1958 ஆம் ஆண்டு மறைந்தார். 

★ அவரது மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டது. ஆசாத்தின் கல்விப் பணிகளுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக அவரது பிறந்த தினம் தேசிய கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது.


இந்திய நவீன கல்வியின் ஆணிவேர் அபுல்கலாம் ஆசாத் | abul-Kalam-azad-is-the-root-of-indian-modern-education இந்திய நவீன கல்வியின் ஆணிவேர் அபுல்கலாம் ஆசாத் | abul-Kalam-azad-is-the-root-of-indian-modern-education Reviewed by Bright Zoom on October 18, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.