பாபர் வரலாறு! History of Babur!

பாபர் வரலாறு!

History of Babur!

Bright Zoom

பாபர் (1526-1530)


★ பாபர் பிறப்பு - 1483- பிப்-14

★ பாபர் முழுப்பெயர்-ஜாகுருதீன் முகமது பாபர்

★ ஜாகுருதீன்-நம்பிக்கையை காப்பவர் தாய்வழி தாத்தா-தாஸ்கண்டை சேர்ந்த யூனுஸ்கான்

★ யூனுஸ்கான்-செங்கிஸ்கானின் 13வது வாரிசு 

★ தந்தை-உமர் சேக் மிர்சா-தாஷ்கண்டை தலைநகராகக் கொண்ட தற்போது ரஷ்யாவில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டின் பர்கானா என்னும் இடத்தை ஆட்சி செய்தவர்.

★ தந்தை இறந்த பின்பு தனது 12-வது வயதில் சமர்கண்ட் மற்றும் பர்கானா தனது பரம்பரை சொத்தாக பெற்றார்.

★ மத்திய ஆசியாவில் இருந்த மூன்று இனக்குழுக்கள் இருந்தது அவை :

1.உஸ்பெக்குகள் -துருக்கி மரபு

2.சபாவிக்கள்-ஈரான் மரபு-முஸ்லிம்-ஷியா பிரிவு

3.உதுமானியர்கள்-துருக்கி மரபு-முஸ்லீம்- சன்னி பிரிவு.

★ மூன்று இனக்குழுக்களின் ஆதிக்கப் போட்டிகளால் பர்கானா மற்றும் சமர்கண்டை விட்டு வெளியேறுகிறார் பாபர்.

★ 1579-1524: காபூல், போரா, கஜினி, லாகூர், சியால்கோட் ஆகிய பகுதிகளை கைப்பற்றி மன்னராக உருவாகிறார் பாபர்.

★ பாபர் இந்தியாவிற்கு பட்டுப் பாதை வழியாக வந்தார்

★ டெல்லி சுல்தானாகிய பஞ்சாபின் ஆளுநர் தௌலத்கான் லோடி, மற்றும் ராஜபுத்திரர்களின் தலைவர்களான மேவாரின் அரசர் ராணா சங்கா ஆகிய இருவரிடம் இருந்தும், இப்ராஹிம் லோடி தோற்கடிப்பதற்காக பாபரை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தனர்.

★ ஆனால் தன்னை அழைத்த தௌலத்கான் லோடியை கிமு 1525-ல் லாகூரில் தோற்கடித்தார் பாபர்.

★ 1526- ஏப்-21 முதலாம் பானிபட்

போர்-இப்ராஹிம் லோடி தோற்கடித்து டெல்லி மற்றும் ஆக்ராவை கைப்பற்றுகிறார்.

★ முதலாம் பானிபட் போரில் பாபர் பீரங்கிப்படையின்(Artillery) மூலமாக இப்ராஹிம் லோடியின் மிகப் பெரிய படையை தோற்கடித்தார்.

★ பீரங்கி சீனாவில் 13ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது . 

★ பின்பு 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வந்தது.

★ 1527-கானுவா போரில் ராணா சங்கா என்னும் ராஜபுத்திரரை தோற்கடித்தார். 

★ 1528-சந்தேரி போரில் மேதினி ராய் எனும் ராஜபுத்திரரை தோற்கடித்தார்.

★ 1529-கோக்ரா போரில் முகமது லோடி என்னும் ஆப்கானியரை தோற்கடித்தார். 

★ டெல்லி சிம்மாசனத்தை கைப்பற்றுகிறார்.

★ இவர் துருக்கி மரபையே விரும்பினார். 

★ பாபர்1530-இறப்பு

அடுத்து பாபர் மகன் நசிருதீன் உமாயூன் ஆட்சி 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். 

தொடரும்..!




பாபர் வரலாறு! History of Babur! பாபர் வரலாறு!  History of Babur! Reviewed by Bright Zoom on November 03, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.