ஏழாம் வகுப்பு - அறநெறிச்சாரம் |Class VII AraNeriSaram

ஏழாம் வகுப்பு - அறநெறிச்சாரம் |Class VII AraNeriSaram

ஏழாம் வகுப்பு - இயல் - 8  கவிதைப்பேழை -அறநெறிச்சாரம் –முனைப்பாடியார். (15)


Bright Zoom,

நுழையும்முன் :

இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும். இளமைப் பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும். அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் ஒன்றினை அறிவோம் வாருங்கள்!


அறநெறிச்சாரம் பாடல் 

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் 

பைங்கூழ் சிறுகாலைச் செய்.

-முனைப்பாடியார்.

பாடலின் பொருள்:

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இட வேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதாம் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.


சொல்லும் பொருளும்:

வித்து -  விதை

களை - வேண்டாத செடி

ஈன - பெற

பங்கூழ் - பசுமையான பயிர்


நூல்வெளி :

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.




ஏழாம் வகுப்பு - அறநெறிச்சாரம் |Class VII AraNeriSaram ஏழாம் வகுப்பு - அறநெறிச்சாரம் |Class VII AraNeriSaram Reviewed by Bright Zoom on November 06, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.