சந்திரயான் 3: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விண்கலம்.. மூளையாக செயல்பட்ட தமிழர் வீரமுத்துவேல்! சந்திரயான் 3: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விண்கலம்.. மூளையாக செயல்பட்ட தமிழர் வீரமுத்துவேல்!
எங்கே களமிறங்கும்?: நிலவின் தென் துருவப் பகுதியில் ரோவர் தரையிறங்கும். 2 கிமீ வேகத்திற்கும் குறைவாக இது தரையிறங்கும். தரையிறங்கிய பிறகு, லேண்டர் 14 பூமி நாட்களுக்கு (ஒரு சந்திர நாள்) மேற்பரப்பில் பொருட்களை இந்த ரோவர் சேகரிக்கும்.
சந்திரயான் 3 மிஷன் ப்ரொபல்ஷன் மாடுல்: 2148 கி.கி
லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ
சந்திரயான் 3 மொத்த எடை: 3900 கிலோ
குறிக்கோள் என்ன?
சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தால்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல்.
எப்போது? எங்கே?: சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார், இருப்பினும் சந்திரனில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்து இது மாறக்கூடும். தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதை இஸ்ரோ மாற்றியமைக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை விண்ணிற்கு அனுப்பும்.
அப்படியே நிலா மாதிரி இருக்கே! சந்திரயான் 3க்காக மண் அள்ளித்தந்த 2 நாமக்கல் கிராமங்கள்! மாஸ்டர்மைண்ட்
சந்திரயான் 3: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விண்கலம்.. மூளையாக செயல்பட்ட தமிழர் வீரமுத்துவேல்!
சென்னை: நிலவுக்கு இஸ்ரோவால் அனுப்பப்படும் சந்திரயான் 3 திட்டத்தில் மூளையாக செயல்படுபவர் ஒரு தமிழர். அவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் தெரியுமா?
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இது சுற்றுப்பாதையை சென்றடைந்த போதிலும் தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கருவி தரையிறங்காமல் நிலவிலேயே மோதி செயலிழந்தது. இதன் பாகங்களை 2 மாதங்களாக இஸ்ரோவும் நாசாவும் தேடி வந்தன. ஆனால் சென்னையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அதே ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி தனது தொலைநோக்கி மூலம் ரோவரின் பாகங்களை கண்டறிந்தார்.
சந்திரயான் 2 திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் ரூ.615 கோடியில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. சந்திரயான் 3 மூலமாக நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்த சந்திரயான் 3 திட்டம் குறித்து இந்தியாவே எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாது. அதிலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரோ விஞ்ஞானியான வீரமுத்துவேல் என்பவர்தான் சந்திரயான் 3 மிஷனின் பின்னணியில் இருக்கிறார். விழுப்புரத்தை சேர்ந்தவர். இவர் சென்னை ஐஐடியில் படித்தவர். இவர் சந்திரயான் 2 திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் வனிதா. இவருக்கு பதிலாகத்தான் வீரமுத்துவேல் இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல். இவர் தென்னக ரயில்வேயில் டெக்னீசியனாக பணியாற்றியவர். இவர்கள் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தனர். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்தார். பிறகு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கில் டிப்ளமோ படித்துள்ளார். இதைத் தொடர்ந்து சென்னையில் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார்.
வீரமுத்துவேலின் சிறுவயது கனவு என்பது இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதுதானாம். இவர் நியமிக்கப்பட்ட போது ஏற்கெனவே அந்த திட்டத்தின் இயக்குநராக இருந்த வனிதா மாற்றப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை.
No comments: