இன்று நள்ளிரவு முதல் அமல் - முக்கியச் செய்திகள் | Amal - Highlights from midnight tonight.
செய்திகள் (ஆகஸ்ட் 31)
உலகச் செய்திகள்
Bright Zoom,
மாநாடு:
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில், செப்டம்பர் 9ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை தருகிறார் என கனடா பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர்:
எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
மத்திய/மாநிலச் செய்திகள்
சந்திரயான்-3:
நிலவை ஆய்து செய்துவரும் சந்திரயான்-3ன் பிரக்யான் ரோவரானது, நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை மீண்டும் மற்றொரு கருவி மூலம் உறுதி செய்துள்ளது என இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
கால அவகாசம்:
புதுச்சேரியில், ஆதாரில் உள்ள விவரங்களை பொதுமக்கள் புதுப்பிக்க செப்டம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை:
உச்ச நீதிமன்றத்தின் பெயரில், தனிநபர்களின் விவரங்களைத் திருடும் நோக்கத்தோடு போலி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழை:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒருசில இடங்களில் நாளை (செப்டம்பர் 01) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கூட்டத்தொடர்:
செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
அட்டவணை:
தமிழ்நாட்டில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.
விடுமுறை:
விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறையை செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்டண உயர்வு:
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கிரிக்கெட்:
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டென்னிஸ்:
நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆம் சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று, 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
No comments: