TNPSC தேர்வுகள்  - 2023: இந்தியாவில் மிகப் பெரிய உலர்தாவரத் தொகுப்பு (Herbarium) எங்கு உள்ளது?

காவலர் தேர்வு - 2023

பொது அறிவு :

தாவர உலகம் - பகுதி-1 


1. வகைப்பாட்டியல் (Taxonomy) என்னும் சொல் ------------ என்னும் இரண்டு கிரேக்கச் சொல்லின் கூட்டு வடிவம் ஆகும்.

 - Taxis Nomos 


2. Taxis  என்னும் சொல்லுக்கு பொருள் என்ன? 

- வகைப்படுத்துதல்


3. வகைப்பாட்டியல் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் யார்? 

- அகஸ்டின் பைரமிஸ் டி கேண்டோல் 


4. வகைப்படுத்துதலின் பிரிவுகள் மொத்தம் எத்தனை? 

- நான்கு

அவை :

1. செயற்கை வகைப்பாட்டு முறை 

2. இயற்கை வகைப்பாட்டு முறை 

3. மரபுவழி வகைப்பாட்டு முறை

4. நவீன வகைப்பாட்டு முறை


5. இயற்கை வகைப்பாட்டு முறைக்கு எடுத்துக்காட்டு தருக? 

- பெந்தம் மற்றும் ஹுக்கரின் வகைப்பாட்டியல் முறை


6. ஜிம்னோஸ்பெர்ம் (திறந்த விதையுடைய தாவரங்கள்) மொத்தம் எத்தனை குடும்பங்களை கொண்டுள்ளது? 

- மூன்று


1. சைக்கடேசி 

2. கோனிஃபெரே 

3. நீட்டேசி


7. எந்த தாவரங்களில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது? 

- ஒரு விதையிலைத் தாவரங்கள்


8. இயற்கை வகைப்பாட்டு முறையைத் தங்கள் ஜெனிரா பிளான்டாரம் என்ற மூன்று தொகுதிகளைக் கொண்ட புத்தகத்தில் விளக்கியுள்ளவர் யார்? 

- பெந்தம் மற்றும் ஹுக்கர்


9. மாமரத்தின் தாவரவியல் பெயர் என்ன? 

- மாஞ்சிஃபெரா இன்டிகா


10. இருசொற் பெயரிடுதல் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? 

- காஸ்பர்டு பாகின்(1623) 


11. இந்தியாவில் மிகப் பெரிய உலர்தாவரத் தொகுப்பு (ர்நசடியசரைஅ) எங்கு உள்ளது? 

- கொல்கத்தாவில்


12. இருசொற் பெயரிடுதல் முறையை யார் முதன்முதலில் தம்முடைய ஸ்பீசிஸ் பிளான்டாரம் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்? 

- லின்னேயஸ்


 

Reviewed by Bright Zoom on September 29, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.