TNPSC- 2023: பொதுத்தமிழ் - உதயணகுமார காவியம் பற்றிய முக்கிய செய்திகள்..!!

பொதுத்தமிழ்

ஐஞ்சிறு காப்பியங்கள் 

உதயணகுமார காவியம் 

★  உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

★  இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.

★ இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்த நூல் ஆகும்.

★  உதயணகுமார காவியம் மொத்தம் 369 பாடல்களை உள்ளடக்கியது.

★  இந்நூலின் மூலநூல் பெருங்கதை (கொங்குவேளிர் இயற்றியது).

★  இந்நூலின் பாவகை விருத்தப்பாவால் ஆனது.

★ இந்நூலின் காலம் 15-ஆம் நூற்றாண்டு ஆகும்.

★ பெருங்கதையின் தலைவனாகிய உதயணனே இந்நூலின் தலைவன் ஆவார்.

★ உதயணனின் மற்றொரு பெயர் விச்சை வீரன் (பலகலை வல்லவன்).

★ கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.

★ சேதி நாட்டு ஆட்சிப் பொறுப்பை யூகியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் கௌசாம்பியில் இருந்துகொண்டு வத்தவ நாட்டை ஆண்டவன்.


இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன.

       ● உஞ்சைக் காண்டம்

       ● இலாவாணக் காண்டம்

       ● மகத காண்டம்

       ● வத்தவ காண்டம்

       ● நரவாகன காண்டம்

       ● துறவுக் காண்டம்.

★ இந்நூலின் ஆறு காண்டங்களும்இ உதயணனின் கதையைக் கூறுகிறது. 

★ இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும்இ பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. 

★ பெருங்கதை - பிருகத்கதா என்ற வடமொழி நூலின் அடிப்படையில் எழுந்தது என்றும் கூறுவர்.

★ குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத்கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7-ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல் ஆகும்.

★  பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ.வே.சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.


Reviewed by Bright Zoom on September 29, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.