TN Police :காவலர் தேர்வு - 2024: தேர்வு நிலைகள் பற்றிய விவரம்..!!

 TN Police  :காவலர் தேர்வு - 2024: தேர்வு நிலைகள் பற்றிய விவரம்..!!

காவலர் தேர்வு - 2024


தேர்வு நிலைகள் பற்றிய விவரம்

தேர்வு நிலைகள்


எழுத்துத் தேர்வு


பகுதி - l. தமிழ் மொழி தகுதித் தேர்வு:


தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.


இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.


இத்தேர்வானதுஇ 80 மதிப்பெண்களுக்கான 80 வினாக்களைக் கொண்டது. இத்தேர்விற்கான கால அளவு 80 நிமிடங்கள் (1 மணி 20 நிமிடங்கள்).


தமிழ் மொழித் தகுதித் தேர்வில் (பிரிவு-ஐ) குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் (40%) பெற்றால் மட்டுமே, விண்ணப்பதாரர்களுடைய, முதன்மை எழுத்துத் தேர்வின் (பிரிவு-ll) விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்


தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.


பகுதி - ll. முதன்மை எழுத்துத் தேர்வு :


பகுதி-அ: பொது அறிவு - 45 மதிப்பெண்கள் (கொள்குறி வினா வகை)


பகுதி-ஆ: உளவியல் - 25 மதிப்பெண்கள் (கொள்குறி வினா வகை)


பொது அறிவு கேள்விகள் தமிழ்நாடு அரசுப் பாடநூல்களில் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களிலிருந்து கேட்கப்படும்.


எழுத்துத் தேர்வுக்கான நேரம் 80 நிமிடங்கள் (1 மணி 20 நிமிடங்கள்).


ஒவ்வொரு வினாவிற்கும் தலா 1 மதிப்பெண் வழங்கப்படும்.


விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் (35%) பெற்றிருக்க வேண்டும்.


எழுத்துத் தேர்வு மாவட்டஃமாநகர தேர்வு மையங்களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான விருப்பப்பட்ட மாவட்ட மாநகரத்தை இணையவழி விண்ணப்பத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.


விண்ணப்பதாரர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறுஇ வகுப்பு வாரியாக 1:5 என்ற விகிதாசாரப்படி விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தேர்வான அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல்இ உடற்கூறு அளத்தல்இ உடல்உறுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டி ஆகியனவற்றிற்கு அழைக்கப்படுவார்கள்.


எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்குரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு  இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர் தனது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை மேலே சொல்லப்பட்ட இணையத்தளத்திலிருந்து பயனர் எண்  மற்றும் கடவுச் சொல்லைப்  பதிவிட்டுப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


TN Police :காவலர் தேர்வு - 2024: தேர்வு நிலைகள் பற்றிய விவரம்..!! TN Police  :காவலர் தேர்வு - 2024: தேர்வு நிலைகள் பற்றிய விவரம்..!! Reviewed by Bright Zoom on March 20, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.