2024- மருத்துவ கவுன்சிலிங் நடை முறைகள்| 2024 - Medical Counselling
Bright Zoom,
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், கவுன்சிலிங் நடைமுறைகள், கட்டண விவரம் – தெரிந்துகொள்ளுங்கள்
Medical Counselling :
மருத்துவ கவுன்சிலிங் துவங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அவற்றின் தரவரிசை ஆகியவற்றை தெரிந்துகொண்டால் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றின் தரவரிசைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல்
◆ சென்னை - மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி,
◆ ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,
◆ கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
பின்வரும் கல்லூரிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன.
◆ மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை,
◆ கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்,
◆ ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை,
◆ அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர்,
◆ செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு,
◆ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்,
◆ அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்,
◆ திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி,
◆ கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி,
◆ விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்,
◆ கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி,
◆ வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்,
◆ இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை,
◆ தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி,
◆ அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு,
◆ தேனி மருத்துவக் கல்லூரி, தேனி,
◆ கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம்,
◆ தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்,
◆ கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர்,
◆ திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்,
◆ புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி,
◆ திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்,
◆ சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம்,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்,
◆ அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி ஆகியவை ஆகும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரவரிசை பட்டியல்
தமிழகத்தில் உள்ள 24 தனியார் மருத்துவக்கல்லூரிகளில், கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), வேலூர், பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், கோயம்புத்தூர், கே.எம்.சி.ஹெச் இன்ஸ்டிடியூப் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், கோயம்புத்தூர் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. அடுத்தடுத்து வரும் கல்லூரிகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.
◆ திருச்சி எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர், திருச்சி
◆ வேலம்மாள் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர், சென்னை
◆ கற்பக வினாயகா இன்ஸ்டிடியூப் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், சென்னை
◆ பனிமலர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
◆ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்
◆ ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
◆ தாகூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல், சென்னை
◆ செயிண்ட் பீட்டர்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கிருஷ்ணகிரி
◆ ஸ்ரீ மூகாம்பிகை இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், கன்னியாகுமரி
◆ தனலட்சுமி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், பெரம்பலூர்
◆ கற்பகம் ஃபேகல்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், கோயம்புத்தூர்
◆ அருணை மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், திருவண்ணாமலை
◆ சுவாமி விவேகானந்தா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், நாமக்கல்
◆ அன்னப்பூர்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், சேலம்
◆ மாதா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், சென்னை
◆ இந்திரா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், திருவள்ளூர்
◆ பி.எஸ்.பி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
◆ நந்தா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், ஈரோடு
◆ ஸ்ரீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், திருச்சி
◆ ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
◆ தனலட்சுமி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், பெரம்பலூர்
தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது.
எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் பட்டப் படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://tnmedicalselection.net/
மூலம் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங் பதிவு படிவத்தை ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நீட் கவுன்சிலிங்கிற்கு பதிவுசெய்ய, விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்
மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.13,600, தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.4,50,000.
No comments: